சென்னை, டிச. 29- திருவொற்றியூர் அண்ணாமலை நகர் சுரங்கப்பாதை பணிகளை உடனடியாக துவக்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ரயில்வே கேட் அருகே தெற்கு பகுதிச் செயலாளர் ஆர்.கருணாநிதி தலை மையில் ஞாயிறன்று (டிச. 29) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டு மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுந்தர ராஜன் பேசுகையில், சுரங்கப் பாதைக்காக நிலம் கையகப்படுத்த அண்ணா நகர், அண்ணாமலை நகர் பகுதிகளில் உள்ள கடை களை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் வரு வாய் துறை கேட்டது. அதன்படி சுமார் 18 கடை கள் மற்றும் வீடுகள் இடிக்கப் பட்டன. அவர்கள் கேட்ட அளவு சாலையும் ஒதுக்கித் தரப்பட்டது. ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளாக சுரங்கப்பாதை பணிகள் தொடங்கவில்லை . மீண்டும் அண்ணா நகரில் சுமார் 150 வீடுகளை அகற்ற வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்பது அநீதியாகும். ஏற்கெனவே இடிக்கப்பட்ட வீடு களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை என்றார். அண்ணாமலை நகர் ரயில்வே கேட் மூடப்பட்ட தால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், அன்றாடப் பணிகளுக்குச் செல்லும் தினக்கூலி தொழிலாளர்கள், வியா பாரிகள், வீட்டுப் பணிகள் அனைத்தையும் செய்து முடித்து அரக்க பறக்க அலு வலகம் செல்லும் பெண்கள், ஆலைத் தொழி லாளர்கள், சிறு குறு தொழில் புரிவோர் சுமார் 6 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் செல்வோ ருக்கு பெட்ரோல் செலவு அதிகரிக்கிறது. வாகன மில்லா அத்துக்கூலிகள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையைக் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை. இதனால் 10க்கும் மேற்பட்டோர் உயி ரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். ரயில்வே நிர்வாகம் உடனடியாக சுரங்கப்பாதை பணிகளை துவக்க வேண்டும், பணிகள் முடியும் வரை மாற்றுப் பாதையில் தனியாக கேட் அமைத்து போக்குவரத்திற்கு வழி வகை செய்ய வேண்டும். இடிக்கப்பட்ட வீடுகள், கடைகளுக்கு மாற்று இட மும், இழப்பீடும் உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதில் மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.கதிர்வேல், ஆர்.செல்வகுமாரி, எஸ்.புவியரசி, பகுதிக்குழு உறுப்பினர் டி.ஆண்ட்ரூஸ், நிர்வாகிகள் எம்.முருகன், டி.சீனிவாசன் ஆகியோரும் பேசினர்.