மதுராந்தகம், ஜூலை 4
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் ஜங்ஷன் அருகே இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டி ருந்த சிவகங்கை மாவட் டத்தை சேர்ந்த சேது பதி (வயது 23), மதுரை மாவட்டத்தை சேரிந்த அபிஷேக் (20), மதுராந்த கத்தை சேர்ந்த லோகேஸ் வரன் (23), சின்னா என்ற சரண் (22) ஆகியோரை மதுராந்தகம் காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணை யில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த னர். பின்பு அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் அவர் களை கைது செய்தனர். இதைதொடர்ந்து அவர் களிடம் இருந்து 4 பட்டாகத்தி, 6 செல்போன் கள், 5 இருசக்கர வாகனங் கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.