சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. துணைவேந்தர் இராம.கதிரேசன் தலைமை தாங்கினார். பொறியியல் துறை முதல்வர் முருகப்பன் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாராமன் நன்றி கூறினார். இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கலாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சான்று மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.