districts

img

தேசிய சீனியர் ஹாக்கி விளையாட்டு போட்டியில் தமிழக அணி 2ஆம் இடத்தில் வெற்றி

தேசிய அளவில் நடைபெற்ற 12ஆவது தேசிய சீனியர் ஹாக்கி விளையாட்டு போட்டியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அணி 2ஆம் இடத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஐசிஎப் தொழிலாளகள் ஷியாம் குமார், தனுஷ், ச`ஹில், பிருதுவி ஆகிய நான்கு பேருக்கு ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சங்கத்தின் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச்செயலாளர் பா.ராஜாராம், பொருளாளர் கே.டி.ேஜாஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.