districts

img

தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் கூட்டுறவுத்துறை முதன்மைசெயலரிடம் வலியுறுத்தல்

சென்னை, செப். 10 - கேரள வங்கியை போன்று, தமிழகத்திலும் ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக துறை யின் முதன்மைச் செயலா ளர் ஜெ.ராதாகிருஷ்ணனை, கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் தி.தமிழ ரசு, பொதுச் செயலாளர்  இ.சர்வேசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அப்போது, கூட்டுறவு வங்கிகளை மேம்படுத்துவது, வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பது, ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக, கேரள அரசு,  அம்மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை  இணைத்து‘கேரள வங்கி’யை உருவாக்கி யுள்ளது. இந்த வங்கி  மிகப்பெரும் வளர்ச்சியை  கண்டு, மாநிலத்தின் பொரு ளாதார முன்னேற்றத்திற்கு சிறந்த பங்காற்றி வருகிறது. அதேபோன்று, தமிழ்நாடு  மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை  இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண்டும். மேலும், நகர  கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் ஒருங்கி ணைத்து நகர கூட்டுறவு வங்கிகளை பலமுள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நகர, மத்திய கூட்டுறவு  வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்கி, முடித் திட வேண்டும். மத்திய கூட்டு றவு வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண் டும் என்பன உள்ளிட்ட அம்சங் களையும் வலியுறுத்தி மனுக்களை அளித்துள்ளனர்.

;