districts

img

கோடைகால வாலிபால் பயிற்சி

திருவண்ணாமலை, மே 19- திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே, அறிவொளி பூங்கா மைதானத்தில் கோடைகால வாலிபால் பயிற்சி நடைபெற்றது.  கோடைகால வாலிபால் பயிற்சி, பயிற்சியாளர் ஏழுமலை தலைமையில் கடந்த 25 நாட்களாக நடைபெற்று வந்தது.  நிறைவு நாளான  ஞாயிறன்று(மே. 19)    நிறைவு விழா பயிற்சி போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்   வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இரண்டாவது வார்டு வட்டச்செயலாளர் மாறன், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். சாரோன் அரவிந்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

;