ராணிப்பேட்டை,ஜூன் 7- ராணிப்பேட்டை மாவட்டம், பாணவரம் அடுத்த ஆயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காமாட்சி (20) வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவர் 2 ஆம் ஆண்டு படித்த போது அவருக்கும், தேவ அன்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. காமாட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், தனது படிப்பைத் தொடர நினைத்த காமாட்சி குழந்தை பிறந்து ஒரு மாத காலத்தில் கல்லூரிக்கு வந்துள்ளார். பச்சிளம் குழந்தையை கல்லூரிக்குக் கொண்டு வர வேண்டாம் என பேராசிரியர்கள் அறிவுறுத்தி யதாக கூறப்படுகிறது. இதனால் விடுப்பு எடுத்துக் கொண்டதாகக் கூறப்படு கிறது. இந்த நிலையில், இறுதி ஆண்டு தேர்வை எழுத காமாட்சி கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பே பணம் கட்டி யுள்ளார். எனினும், இறுதி ஆண்டுதேர்வுக்கு முந்தைய தேர்வான திருப்புதல் தேர்வில் அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தற்போது 2 மாதங்க ளுக்கு முன்பு இறுதி ஆண்டு தேர்வுக்காக கட்டப்பட்ட கட்டணத் தொகையை பேராசிரியர்கள் திருப்பி வழங்கி, காமாட்சி இறுதி யாண்டு தேர்வு எழுத முடி யாது எனவும், வருகைப் பதிவேட்டில் குறைபாடு உள்ளதாகவும் தெரிவித்துள் ளனர். இதனால் அதிர்ச்சி யடைந்த காமாட்சி தனது கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தன்னை இறுதி ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனக்கோரி தர்ணாவில் ஈடுபட்டார். அவரை பேராசிரியர்கள் சமாதானப்படுத்தியும் அவர் ஏற்காததால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைய டுத்து, அங்கு வந்த வாலா ஜாபேட்டை காவலர்கள், காமாட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதி அளித்ததின் பேரில், அவர் போராட்டத்தை கைவிட்டு சென்றார்.