விழுப்புரம்,டிச.7- அரகண்டநல்லூர் படுகொலைக் கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் கடைவீதியில் வீரபாண்டி சித்ரா,விவசாயி உலகநாதன் ஆகியோர் படுகொலைகளை கண்டித்தும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வலியுறுத்தியும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்கி வேண்டி யும், படுகொலை செய்யப்பட்ட சித்ரா குடும்பத்திற்கு நிவாரணமாக 20 லட்சம் வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் ஒருங்கிணைப்பில் அனைத்து கட்சி கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் அரகண்டநல்லூர் காவல் நிலையம் முன்பு கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.முருகன் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.வேல்மாறன, சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் ஏவி.சரவணன், வீரபாண்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவருமான உமாமகேஸ்வரி. விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாளர் விடுதலை செல்வன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலை வர் முஸ்தாக்தீன்,தேசிய மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.வளர்மதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் எஸ்.கணபதி, கிளைச் செயலாளர் வீரபாண்டி டி.ராமமூர்த்தி உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.