districts

img

வேலூரில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

வேலூர், ஜன. 2 - விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழி லாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்பு களாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதா 2021ஐ கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டி யுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் அகில இந்திய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. வேலூரில் வேலை நிறுத்தத்தை  நடத்துவது குறித்த ஆயத்த மாநாடு பெல்லியப்பா அரங்கில் நடை பெற்றது. இதில் எஸ்.பரசுராமன், எம்.பி.ராமச்சந்திரன் சிஐடியு, எம்.ராதாகிருஷ்ணன், எஸ்.ஆர்.தேவ தாஸ் (ஏஐடியுசி), என்.பால கிருஷ்ணன், கே.ஆர்.சுப்பிரமணியன் (தொமுச), ஆறுமுகம், சுந்தரம் (ஐஎன்டியுசி), கா.வெ.திருப்பதி, கலைவாணி (எச்எம்எஸ்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேலைநிறுத்தத்தையொட்டி பிப்.23, 24 ஆகிய தேதிகளில் அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேர ணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய 9 மையங்களில் சாலை மறியலில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.