ராணிப்பேட்டை, அக். 31 - மதவெறி சக்திகளை வீழ்த்தி, மக்கள் கோரிக் கைகள் முன்னெடுத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் என். காசிநாதன் தலைமையில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. சந்திரன், தா. வெங்கடேசன், எல்.சி. மணி, அ.தவராஜ், என். ரமேஷ், ஆர். மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர். மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்டத் தலைவர் கே. சேகர், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் பி. மணி, பொருளாளர் கே. ரமேஷ், மாதர் சங்கம் மாவட்டத் தலைவர் ஆர். கீதா, வாலிபர் சங்கம் மாவட்டப் பொருளாளர் கலைவாணன், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி ரவிச்சந்திரன், கட்சியின் கிளை செயலா ளர்கள் ரேணு, குணா, சிலம்பரசன், உமர், சத்தியமூர்த்தி, செந்தில், மனோகர், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.