கடலூர்,ஏப்.26- கடலூர் முதுநகர் அருகே இயங்கி வரும் கீயூபெக் தொழிற்சாலையில் 5 தொழிலாளர்கள் மும்பைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் வரை பழைய நிலையே நீடிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. நிர்வாகத்தின் பழிவாங்கல் நட வடிக்கையாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட 5 தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்தவேண்டும் எனவும் ஆலை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தொழிலாளர் நல அலுவல கத்தில் புகார் அளிக்கப்பட்ட தன் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இப்பிரச்சி னையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலையிட்டதன் பேரில் பணியிட மாற்றத்தை நிறுத்தி வைத்தனர். இதற்கிடையே புதனன்று திடீரென 5 தொழிலாளர்களும் மும்பையில் உள்ள தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தால், தொழிலாளர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், இது தொடர்பாக அதிகாரிகள் முன்னிலை யில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்றனர். அதன் பேரில் போராட்டத்தை தொழி லாளர்கள் கைவிட்டனர். இந்த நிலையில் வியாழனன்று (ஏப்.25) கடலூர் கோட்டாட்சியர் அபிநயா தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு முன்னி லையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் 5 தொழிலாளர்கள் மும்பைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக நிர்வாகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை, தற்போது உள்ள நிலையையே தொடர வேண்டும். மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரு தரப்பினரும் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. தீர்ப்பு வரும் வரை தொழிலாளர்கள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. மீறி செயல்பட்டால் உரிய நட வடிக்கை எடுக்கப்படும். 5 தொழி லாளர்களுக்கும் வருகிற 30-ந் தேதி வரை சம்பளம் வழங்குவது எனவும், 29-ந் தேதி அன்று அவர்களை மீண்டும் பணிக்கு அனுமதிப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படும் எனவும் என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், கியூபெக் தொழிற்சங்க தலைவர் சிவானந்தம், செயலாளர் ஜானகி ராமன், துணை செயலாளர் ஸ்ரீதர், கியூபெக் தொழிலாளர் விடுதலை முன்னணி செயலாளர் சக்திவேல் மற்றும் தொழிற்சாலை நிர்வாகிகள், தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.