districts

சென்னை முக்கிய செய்திகள்

மோட்டார்  சைக்கிள்  திருடர்களை  காட்டி கொடுக்கும்  நவீன  கேமராக்கள்

சென்னை, ஜூன் 25- மோட்டார் சைக்கிள் திருடர்களை பிடிப்பதற்கு சென்னை மாநகரில் நவீன கேமராக்கள் கைகொடுத்து வருகின்றன.ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகனேசன்  என்று அழைக்கப்படும் இந்த கேமராக்கள் சென்னை மாநகரில் 28 இடங்களில் நிறு வப்பட்டுள்ளன.இதுபோன்று நிறு வப்பட்டுள்ள 100 கேமராக்கள் மூலமாக திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.  இந்த கேமரா திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை எப்படி கண்டுபிடித்து கொடுக்கிறது.இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் எந்த பகுதியில் திருடப்பட்டுள்ளது. அது எந்த வகையான வாகனம் என்பது பற்றி வாகனங்களை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலை யங்களில் புகார் கொடுத்திருப்பார்கள்.அந்த தகவல்கள் அனைத்தையும் இதற்கென உருவாக்கப்பட்டுள்ள செயலி யில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளோம். இது போன்று 2021-ம் ஆண்டில் இருந்து 3,200 வாகனங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருட்டு வாக னங்களை கண்டுபிடித்துக் கொடுக்கும் நவீன கேமராக்கள் அதனை புள்ளி விவரத்தோடு காவல் துறையின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி வைத்து வருகிறது. இது போன்று சென்னை மாநகரில் தினமும் மூன்று அல்லது நான்கு திருட்டு வாகனங்கள் பிடிபடுவதாக போலீ சார் தெரிவித்துள்ளனர். இதற்காக நட மாடும் கேமராக்களையும் காவல் துறை யினர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கேமராக்களும் திருட்டு மோட்டார் சைக்கிள்களை காட்டிக் கொடுத்து வரு கின்றன.இத்தகைய 50 கேமராக்களும் பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலமாக திருட்டு மோட்டார் சைக்கிள்களை கண்டு பிடிப்பது தற்போது காவல்துறைக்கு மிக வும் எளிதான விஷயமாக மாறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரம்: போதைப் பொருள் வழக்கில் 10236 பேர் கைது

விழுப்புரம், ஜூன் 25- விழுப்புரம் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் வழக்கில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி  குறிப்பில், மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம்  01.04.2023 முதல் நாளது தேதி வரை 10,468வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10,236 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 35 நபர்கள் மீதும், 2024 ஆம் ஆண்டில்  4 நபர்கள் மீதும் மொத்தம் 39 நபர்கள் மீது தடுப்புக் காவல்  சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை மத்திய புலனாய்வு பிரிவுக்கு 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 9498410581 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கலால் பிரிவுக்கு 04146-225431 என்ற  தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும். எனவே, பொதுமக்கள் கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்ஆகியவற்றின் பயன்பாட்டை முற்றி லுமாக தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  அதில் மாவட்டஆட்சியர்  சி.பழனி கேட்டு கொண்டுள்ளார்.

வாகன நிலையம் செயல்பட  புதுச்சேரி ஆணையர் அனுமதி 

புதுச்சேரி,ஜூன் 25- சிஐடியு கோரிக்கையை ஏற்று போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல்  மினி வாகன நிலையம் செயல்பட புதுச்சேரி நகராட்சி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். புதுச்சேரி கடலூர் சாலையில் ஏ.எப்.டி மைதானத்தில்   தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருவதால், சுதேசி  பஞ்சாலை எதிரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் மினி வேன் வாடகை நிலையத்தை மாற்று இடத்திற்கு  மாற்ற வேண்டும் என்று  புதுச்சேரி நகராட்சி நிர்வாகம்  சார்பில் திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நகராட்சியின் இந்த நடவடிக்கையால் மினி வேன் வாடகை நிலையத்தில் ஓட்டுநர்களாக உள்ள  100 க்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. நகராட்சி யின் அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரி போக்குவரத்து காவலர்கள் மினி வேன் வாடகை நிலையம் செயல்பட அனுமதி மறுத்தனர். இதை அறிந்த சிஐடியு புதுச்சேரி மாநில தலைவர்கள் நகராட்சியின நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் :  மாவட்ட ஆட்சியர் தகவல்

விழுப்புரம், ஜூன் 25- மீட்புப் பணிகளில் ஈடுபட்டு காப்பாற்றியவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் இந்திய அரசின்  சார்பில் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீரில் மூழ்கியவரை காப்பாறுதல், மின்சார விபத்துகள், தீ விபத்துகள், நிலச்சரிவு, விலங்கின தாக்குதல், சுரங்க மீட்பு  நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு பல்வேறு  பிரிவுகளில் இந்திய அரசின் ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. விருது தொடர்பாக இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ 7401703485 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

காதலன் இறப்புக்காக மாணவி தற்கொலை

விழுப்புரம், ஜூன் 25- காதலன் உயிரிழந்த சோகத்தில் காதலி  எலி  பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் மகள் விஜயலட்சுமி (20). இவர் முண்டியம்பாக்கம் முத்துசாமி நகர் பகுதியில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பாராமெடிக்கல் 2-ம்ஆண்டு படித்து வருகிறார். சேலம் மாவட்டம், வீராணத்தை சேர்ந்த உறவினரான வினோத் என்பவரை இவர் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வினோத் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த விஜயலட்சுமி கடந்த 21ம் தேதி தான் தங்கியிருந்த வீட்டில் எலி விஷத்தை உண்டு தற்கொலைக்கு முயன்றார். மயக்க நிலையில் இருந்தஅவரை வீட்டில் இருந்த சக மாணவிகள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பணிகளை  மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்குக! புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் வலியுறுத்தல் 

புதுச்சேரி, ஜூன் 25- எய்ட்ஸ் கட்டுபாட்டு திட்டத்தின் கீழ்  வழங்கப்படும் பணியை மூன்றாம் பாலினத்த வருக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று புதுச்சேரி அரசை முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் உமாஅமர்நாத், செயலாளர் ம.கலியமூர்த்தி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப் பதாவது, குடும்பம் முதல் சமூகம் வரை ஒதுக்கப்பட்டு விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட மூன்றாம் பாலினத்தவர் தனது  தொடர் முயற்சியால் தற்போது பல துறைகளி லும் பணிபுரிந்து வருகிறார்கள்.அந்த வகையில் கடந்த 21 வருடங்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சகோதரன்  என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கும் பணியை சீரிய முறையில் செய்து வருகின்ற னர்.          இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு  சில அலுவலர்கள் மூன்றாம் பாலினத்தை சொல்லி கிண்டல் செய்வது பணியின்போது அவர்களை சீண்டுவது போன்ற அட்டூழியங்களை செய்து அத்திட்டப் பணியினை தட்டிப் பறிக்கும் சதித் திட்டத்தை  நிறைவேற்றி வருகிறார்கள். இந்நிலை தொடருமாயின்  அவர்கள் மீண்டும் வீதிக்கு செல்லும் நிலை நேறிடும்.எனவே உடனே தலையிட்டு எய்ட்ஸ் கட்டுப் பாடு அலுவலக ஊழியர்களை நெறிப்படுத்து வதோடு, விளிம்பு நிலையில் வாழும் அச்சகோதரிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் அத்திட்டத்தை அவர் களுக்கே மீண்டும் புதுச்சேரி அரசு  வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறது. மேலும் மாற்றுப் பாலினத்தோரை அவமதிக்கும் அதிகாரிகளை முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது. இன்று (புதன்கிழமை) நடக்க இருக்கும் நீதி கேட்பு பேரணியில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு பேரணியை வலுப்படுத்த வேண்டுமென முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.