districts

காஞ்சிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்

காஞ்சிபுரம்,ஆக.4-

     அரசு பேருந்துகளில் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

     சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் பயணம்  அதிகமாக உள்ளது. அதே போல புறநகரங்களில் இருந்தும்  சென்னைக்கு மக்கள் அதிகளவில் பயணிக்கிறார்கள். அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலத்தின் மூலம் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு  பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்  பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தாம்பரம்,  கோயம்பேடுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, விழுப்புரத்திற்கு 40, கோயம்பேட்டில் இருந்து திருச்சி, விழுப்புரம், பாண்டிச்சேரி, திருப்பதிக்கு 50 என மொத்தம் 150 சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படுகிறது.