சிதம்பரம், ஆக. 6-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சிவலிங்கம் (56) உடல் நலக்குறைவால் காலமானார். நற் கந்தன்குடி கிராமத்தில் உள்ள வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆழ்வார், வடக்கு விஜய், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வாஞ்சிநா தன், சித்ரா, விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் அரங்க. தமிழ்ஒளி, பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி பலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த சிவலிங்கம் நற் கந்தங்குடி, உடையாமேடு, உத்தமசோழமங்கலம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட வர்.