கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து தேன்கனிக்கோட்டையில் தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா,சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். சேகர், தளி, கெலமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், ராஜா மற்றும் அனுபப்பா, சந்திரசேகர், தளி சட்டமன்ற உறுப்பினர் டி.இராமச்சந்திரன், சிபிஐ மாநிலகுழு உறுப்பினர் லகுமையா, மனிதநேய மக்கள் கட்சி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் கை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.