திருவண்ணாமலை,மார்ச் 21- திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை, திமுக மருத்துவரணி துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமையில் வேலூர் சாலையில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் உருவச் சிலைக்கும், மத்திய அஞ்சல் நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கும் அதனைத் தொடர்ந்து செங்கம் சாலையில் பெருந்தலை வர் காமராஜர் சிலைக்கும் திமுக நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகி யோரும் கலந்து கொண்ட னர்.