districts

img

கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க கோரிக்கை

திருவள்ளூர், பிப்.18- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்க்கத்தில்,  கொரோனா பெருந் தொற்றுக்கு முன் இயக்கிய அனைத்து ரயில்களையும் மீண்டும் முழுமையாக இயக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பயணிகள் சங்கத்தின் கூட்டம் மீஞ்சூரில் ரயில் சங்கத் தலைவர் இரா.தீன தயாளன்  தலைமையில் நடைபெற்றது. இதில் ரயில் பயணிகள் சங்கத்தின் செய லாளர் டி.தனுஷ்கோடி, காப்பாளர் முனை வர் பெ.ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சமூக ஆர்வலர்கள் எஸ்.அசோக் பிரிய தர்ஷன், அத்திப்பட்டு  எம்.குணசேகரன், அசோக் லேலண்ட் டி.சேகர், எண்ணூர் பவுண்டரி ஆர்.அருள், எஸ்.சரவணன், கே.வேலாயுதம், பொன்னேரி ஜி.சுகுமார் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். பொதுமக்களின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் அத்திப்பட்டு- சூலூர்பேட்டை இடையே தற்போதுள்ள 2 வழித்தடத்தை 4 வழிப் பாதையாக மாற்ற வேண்டும். புறநகர் ரயில்களின் காலதாமதத்தை தவிர்க்க, சென்னை- அத்திப்பட்டு இடையே அமைக்கப்பட்டுள்ள 3 மற்றும் 4 -ஆவது வழித்தடத்தை விரைவு மற்றும் சரக்கு போக்குவரத்து முழுமையாக பயன்படுத்த வேண்டும். அலுவலகம் மற்றும் கல்லூரிக்கு செல்லும் பெண் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக அனைத்து ரயில்களையும் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்ற வேண்டும். கும்மிடிப்பூண்டி வழியாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களையும் கும்மிடிப்பூண்டியில் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது நின்று செல்ல வேண்டும். மெட்ரோ ரயில் விம்கோ நகரிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க வேண்டும், மீஞ்சூர் அல்லது பொன்னேரியில் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலை யத்தில் புதிதாக ஏற்படுத்த வேண்டும். விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலை யம் செல்லும் பயணிகள் வசதிக்காக சூலூர்பேட்டைக்கும் - திருவொற்றியூருக்கு இடையே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.