அம்பத்தூர், ஜூலை 3-
பூந்தமல்லியில் சாலை யின் நடுவே உள்ள மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள் தினசரி அச்சத்துடன் சென்று வருகின்றனர். மின் கம்பத்தை மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூந்தமல்லி நகராட்சிக் குட்பட்ட 5ஆவது வார்டு ராஜாமணி நகரில் ஏராள மான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஒரு சாலையின் நடுவே மின்கம் பம் அமைக்கப்பட்டிருப்ப தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள் ளனர். குறிப்பாக இச்சாலை 3 பிரிவாக பிரிந்து வளைவு, நெளிவுடன் இருக் கும் நிலையில் சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனை கண்டு கொள்ளா மல் நகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைத்து புதி தாக தார் சாலை அமைத் துள்ளனர்.
மேலும் இச்சாலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றாததாலும், போதிய முன்னெச்சரிக்கை பலகை அமைக்காத்தாலும் இரவு நேரத்தில் வரக்கூடிய வாகன ஓட்டிகள் சாலையின் நடுவே இருக்கக்கூடிய மின் கம்பத்தில் மோதி விபத்துக் குள்ளாகின்றனர்.
ஒரு வாகனம் வரும் போது, மற்றொரு வாகனம் செல்வதற்கு கடும் சிரமமாக உள்ளது. சில இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த மின் கம்பத்திற்கு கீழே புகுந்து செல்வதால், தலையில் காயம் ஏற்படுகிறது.
எனவே சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.