districts

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே 3 சுங்கச்சாவடிகள் அகற்றம்

மாமல்லபுரம், செப்.6- சென்னை-புதுச்சேரி கிழக்கு  கடற்கரை சாலை வழித்தடத்தில் 3 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள் ளது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், சுங்க கட்டண சாவடியாக 20 ஆண்டுகளாக நிர்வகித்து பராமரித்தது. இந்த வழித்தடத்தில் உள்ள மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாடு காரணமாக 2018-ம் ஆண்டு சென்னை அக்கரை - மாமல்லபுரம் பகுதி மட்டும் 4 வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது. பாரத்மாலா பாரியோ ஜனா திட்டத்தில் மாமல்ல புரம்-முகையூர் இடையே 31கி.மீ. பகுதியை ரூ.675 கோடி மதிப்பில் 4 வழிப்பாதையாக மேம்படுத்த தற்போது பணிகள் நடக்கின்றன. இதையடுத்து முகையூர்-மரக்காணம் இடையே 31 கி.மீ. பகுதி ரூ.595 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் மரக்காணம்-புதுச்சேரி இடையே 45 கி.மீ. பகுதி  மேம்படுத்தப்படும். இந்த வழித் தடத்தில் சாலைகள் மோசமடைந் துள்ள நிலையில் சுங்க கட்டணம் தொடர்ந்து உயர்த்தி வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழையின் போது கட்டண வசூல்  சர்ச்சையானது. மாமல்லபுரம்-புதுச்சேரி பகுதி சுங்க கட்டணத்தை கைவிடுமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியதால் சுங்க  கட்டணம் வசூலிப்பது கைவிடப் பட்டது. சுங்க கட்டணம் கைவிடப்  பட்டதையடுத்து இங்கு சுங்கச்சாவடி களை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள  2 சுங்கச்சாவடிகள், வெங்கல்பாக் கத்தில் உள்ள ஒரு சுங்கச்சாவடி என  மொத்தம் 3 சுங்கச்சாவடி மையங்கள்  அகற்றும் பணியை சாலை மேம்பாட்டு நிறுவனத்தினர் திங்களன்று தொடங்கி னர்.