கள்ளக்குறிச்சி,நவ.24- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், சூளாங்குறிச்சி கிராமத்தில் உள்ள மணி முக்தா நதி அணையிலிருந்து விவசாயிகளின் பாச னத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய பெருந்தலைவர் கள் திலகவதி நாகராஜன், அலமேலு ஆறுமுகம், தாமோதரன், துணைத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.