பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடக்கும் போரை நிறுத்த வலியுறுத்தி ஞாயிறு அன்று (ஜூன் 2) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணி நடைபெற்றது. இதன் நிறைவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கவிஞர் ஜோசப் ராஜா-வின் ‘காத்திருக்கும் சாவிகள்’ கவிதை நூலை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட இளங் கம்யூனிஸ்ட்டுகள் பெற்றுக் கொண்டனர். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் உள்ளிட்ட தலைவர்கள் உடன் உள்ளனர்.