districts

img

வடசென்னையை கலக்கும் புதுயுகம் கலைக்குழுவினர்

சென்னை, ஏப். 8- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி புதுயுகம் கலைக்குழுவினர் வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு தீவிர பிரச்சாரம் செய்து வரு கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டக் குழு முன்னெடுப்பில் புது யுகம் கலைக்குழு செயல்படு கிறது. தற்போது நடை பெறும் மக்களவைத் தேர்தலையொட்டி “கானல் நீர்” என்ற தலைப்பில் நாடகங்களை வடசென்னை முழுவதும் அரங்கேற்றி வருகின்றனர். இதில் பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள வேலையின்மை, விலை வாசி உயர்வினால் மக்கள் படும் அவதி. மாண வர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுவது. ஜனநாயகம், அரசியல் சாசனம், சமூக நீதி சிதைக்கப்படுவது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவது போன்ற பல்வேறு கருத்துக்   களை எடுத்துக் கூறும் வகையில் நாடகம் வடி வமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடகம் மக்க ளிடையே நல்ல வர வேற்பை பெற்றுள்ளது. இந்த குழுவின் ஒருங்கி ணைப்பாளராக இரா.தெ.முத்து,மணிநாத், செயல்படுகின்றனர். நாட கத்தின் கதைக்கருவை பகத்சிங் கண்ணன் உரு வாக்கியுள்ளார். இதில் பிரேம், சுகந்திரதேவன், விமலா, அருள், சுரேஷ், வடி வேல், வசுமதி, இந்திரதீபன், தனசேகர், குமார கிருஷ் ணன் ஆகியோர் கலைப் பணியாற்றி வருகின்றனர்.