districts

img

வீடற்றஅனைவருக்கும் தொகுப்பு வீடு வழங்குக: பிரச்சார பயணத்தில் வலியுறுத்தல்

திருவள்ளூர், மார்ச் 10- வருமானவரி வரம்பிற்குள் வராத மக்க ளுக்கு உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, விச, விதொச ஆகிய அமைப்புகள் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் வெள்ளியன்று (மார்ச்  10) நடைபெற்றது. சோழவரம் அருகில் உள்ள பாடிய நல்லூரில் துவங்கிய பிரச்சார நடைபயணம் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு எடப்பாளையத்தில் நிறை வுற்றது. இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் தலைவர் கே.விஜயன், விவசாயி கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அ.து.கோதண்டன் ஆகியோர் தலைமை யில்  நடைபெற்றது. சிபிஎம் ஒன்றிய செய லாளர் ஜி.வி.எல்லையன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை வட்டம், தாமரைப் பாக்கம் கூட்டுச்சாலையில் துவங்கிய நடை பயணத்திற்கு சிஐடியு மாநிலத் தலைவர் ஏ.ஜி.சந்தானம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட உதவி செயலாளர் ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் தலைமையில் திருக்கண்டலம், காவனூர், பூரிவாக்கம், கன்னிகைப்பேர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. பூந்தமல்லி பகுதிக்கு உட்பட்ட திரு நின்றவூர் பெரியார் நகரில் துவங்கிய நடை பெற்ற பிரச்சார பயணத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் என்.நித்தி யானந்தம், விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.பெருமாள் ஆகியோர் தலைமையில் கன்னிகாபுரம், நத்தம்மேடு, கொட்டாம்பேடு, சென்று லட்சுமிபதி நகரில் நிறைவுபெற்றது.இதில் பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் ஜெ.ராபர்ட்எபிநேசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.