districts

img

குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்குக

சென்னை, செப். 10- பெரம்பூர் எம்கேபி நகர் சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் பி.முகமது காசிம்  தலைமையில் செவ்வாயன்று (செப். 10) நடைபெற்றது. சங்க நிர்வாகி ஆர்.ரகு வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். எஸ்.கோபாலகிருஷ்ணன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாநகராட்சி விற்பனைக்குழு உறுப்பினர்கள் கே.பலராமன், ஜி.மோனிஷா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் பேர வையை நிறைவு செய்து பேசினார். ஏ.நைனா  முகமது நன்றி கூறினார். தீர்மானங்கள் சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க  வேண்டும், அத்தியாவசிய தேவைக்காக சாலையோர கடைகளை அப்புறப்படுத்தும் போது, மாற்று இடம் வழங்கி விட்டு  அப்புறப்படுத்த வேண்டும், அனைவருக்கும்  அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தலைவராக பி.முகமது காசிம், செயலா ளராக எஸ்.கோபாலகிருஷ்ணன், பொருளா ளராக ஜி.மோனிஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.