கடலூர், செப்.13- நெல்லிக்குப்பத்தில் சாலை விரி வாக்கம் கோரி மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய மறியல் போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் அராஜகமான முறையில் கைது செய்தனர். கடலூர்-மடப்பட்டு தேசிய தொழில் தட சாலை நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஸ்டேட் பேங்க் முதல் அண்ணா சிலை வரை உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில், ஒரு பகுதி வியாபாரிகளுக்கு ஆதரவாகவும் மற்றொரு பிரிவுக்கு விரோதமாகவும் ஒருதலைப் பட்சமாக வும் சாலை அமைக்கப்படுகிறது என்று பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மிகவும் குறுகலாக அமைக்கப்படும் இந்த சாலையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சாலை அளவீடு செய்யும் போது விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லிக்குப்பத்தில் புதன்கிழமை (செப்.13) மறியல் போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டது. இதையொட்டி, பேருந்து நிலை யம் அருகே திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நட வடிக்கை என்ற பெயரில் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன் ஆகியோருடன் காவல்துறையினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து வெங்கடேசன் தலைமையில் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்டச் செய லாளர் கோ. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்ப ராயன், நெல்லிக்குப்பம் பகுதி செய லாளர் எம்.ஜெயபாண்டியன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஆர்.வி. சுப்பிரமணியன், சுந்தரபாண்டியன், ஸ்டீபன் ராஜ், வேலு, னெஜன்ம ராகினி, ரேவதி உட்பட 100 பேரை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட தோழர்கள் அந்த இடத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டார்.