districts

img

தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி,செப்.20-  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில், தூய்மை இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் அலு வலகம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மை யாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதி மொழி யினை மாவட்ட வரு வாய் அலுவலர் ஜீவா தலை மையில் சட்டமன்ற உறுப்பி னர்கள் வசந்தம் கார்த்தி கேயன், உதயசூரியன் மற்றும் அரசு அதிகாரிகள் அலுவ லர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது,“சுத்தமே சுகாதாரம் என்ற வாழ்வி யல் வழிமுறையை கடை பிடிப்பேன், தூய்மை மற்றும் சுகாதாரத்துறை கூடிய வளர்ச்சியே என் லட்சியமாக கடைப்பிடிப்பேன், எனது அலுவலகத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்வேன் என உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் அலுவலகத்தில் காகிதங்களை பயன்பாட்டி னை குறைத்துக் கொள்வதற்கான முயற் சியை செய்வேன் எனவும், உணவு அருந்தும் இடம் கழிப்பிடம் சுத்தமாக வும் சுகாதாரமும் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்  வேன் எனவும், தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு முயற்சி செய்யும் அனைத்து முயற்சி களிலும் என்னை முழு மையாக ஈடுபடுத்திக் கொள்  வேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்தத் தூய்மை உறுதி மொழி நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி மடம்.பெருமாள், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார்,  நகர மன்ற தலைவர் சுப்ராயலு, சின்ன சேலம் ஒன்றிய சேர்மேன் சத்திய மூர்த்தி மற்றும் அரசு அதி காரிகள் அலுவலர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.