districts

img

ஓசூரில் சாலை சந்திப்புக்கு பெரியார் பெயர் எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டம் பிசுபிசுத்தது

கிருஷ்ணகிரி,ஜன.25 - ஓசூர் முனீஸ்வரர் நகர் பகுதியில் உள் வட்ட சாலை 100 அடி சாலை சந்திப்பு பகுதிக்கு தந்தை பெரியார் சதுக்கம் என பெயர் வைக்க ஓசூர் மாநகராட்சியில் கடந்த  2022 ஆம் ஆண்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.   அதைத்தொடர்ந்து, தமிழக அரசால் 22.8.2023 அன்று அரசாணை வெளி யிடப்பட்டது. அதன்படி, கடந்த 21 ஆம் தேதி ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள், அலு வலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் தந்தை பெரியார் சதுக்கம் என்ற பெயர் பலகையை வைத்தனர். இதற்கு, பாஜக மற்றும் சங் பரிவார் கூட்டத்தை சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், முனீஸ்வர் நகர் 100 அடி சாலை சந்திப்பு பகுதியில் ஓசூர் துணை காவல் கண்காணிப் பாளர் அக்ஷய் வாக்கர்  தலைமையில் காவல்துறையினர் குவிக்கப் பட்டனர். இதையடுத்து, பயந்துபோன பாஜக வினர் போராட்டம் நடத்த முடியாமல் ஓட்டம் பிடித்தனர்.