districts

சென்னை முக்கிய செய்திகள்

வாகனமில்லா ஞாயிற்றுகிழமை இன்று கடைப்பிடிப்பு

சென்னை, செப்.3-  சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இன்று வாகனமில்லா ஞாயிற்று கிழமை கடைப்பிடிக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்கு வரத்து காவல்துறை தெரி வித்துள்ளது.   இதுகுறித்து வெளி யிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெசன்ட் நகர், 6வது அவென்யூ கிழக்கு பகுதியில் 32வது குறுக்கு தெருவிலிருந்து 3வது பிரதான சாலை சந்திப்பு வரை “Car-Free Sunday” நிகழ்ச்சியானது ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 8 வாரங்கள் காலை 6மணி முதல் 9மணி வரை மேற்கண்ட பகுதியில் சென்னை பெருநகர போக்கு வரத்து காவல் துறையால் நடத்தப்படும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடும் பொது மக்க ளுக்கு இந்த பகுதி பயன் படுத்தப்படும். இந்நிகழ்ச்சிக் காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

சிறுவியாபாரிகளுக்கான டிஜிட்டல் செயலி அறிமுகம்

சென்னை,செப். 3 சிறு வியாபாரிகளுடன் நுகர்வோரை செயலி மூலமாக இணைக்கும்  பைசாடோ  என்ற புதிய டிஜிட்டல் செயலி துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பெருநிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளுக்கு தொடர்ந்து வர்த்தக வாய்ப்புகளை வழங்க இந்தசெயலி பயன்படும் என்றார். இந்தசெயலியால் வியாபரிகளும் நுகர்வோரும் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார். பெரும்பாலான செயலிகள் அல்லது யுபிஐ கட்டண ஆப்ஸ்கள், வாடிக்கையாளர்களுக்கு வவுச்சர்கள், கேஷ்பேக் கூப்பன்கள் மற்றும் பாயிண்ட்ஸ் அடிப்படையில் கேஷ்பேக்கை வழங்குவதாக அறிவித்தாலும் அதற்காக அவை விதிக்கும் நிபந்தனைகள் அதிகம் என்று பைசாடோவின் நிறுவனர் தீபக் கூறினார்.  இந்த செயலியை மற்றவர்களுக்கு பரிந்துரைத்தால் பரிந்துரைத்த நபருக்கு புள்ளிகள் அடிப்படையில் குறிப்பிட்ட தொகை தொடர்டந்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சல்லானி, தென் மண்டல ரீடெய்லர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சில்லறைப்பிரிவு தலைவர்  டி.வெங்கடராமன் மற்றும் அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர்கே.டி.ஸ்ரீனிவாச ராஜா உள்ளிட்டோர் பைசாடோ-வின் செயலியை அறிமுகப்படுத்தினார்கள்.

வரி செலுத்தாவிட்டால் அபராதம் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை,செப்.3-  சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர்.  குடியிருப்பு வீடுகளாக வும் வணிக பகுதியாகவும் இவை கணக்கிடப்படுகிறது. சொத்து வரி ஆண்டுக்கு இருமுறை அரையாண்டு வீதம் வசூலிக்கப்படுகிறது. சொத்துவரி உயர்த்தப் பட்டு தற்போது நடை முறைப்படுத்த ப்பட்டுள்ளது. புதிய சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1200 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சொத்து வரியை வசூலிக்க வருவாய் துறை ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். முதல் அரை யாண்டு காலம் இந்த மாதத்துடன் முடிவதால் ரூ.700 கோடி வசூலிக்க வேண்டும். ஆனால், இதுவரை யில் ரூ.490 கோடி தான் வசூல் ஆகி இருப்பதாக வரு வாய் அதிகாரிகள் தெரிவித்த னர். இன்னும் ரூ.210 கோடி வசூலிக்க வேண்டிய நிலையில் இலக்கு டன் பல்வேறு கட்ட நடவடிக் கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.  புதிய சொத்துவரி மட்டுமல்லாமல் ஏற்கனவே செலுத்தாமல் நிலுவையில் உள்ள சொத்து வரியை யும் செலுத்த உரிமையா ளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் உரிமை யாளர்கள் மீது சீல் வைப்பு நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது. இதே போல தொழில் வரி செலுத்த வும் இந்த மாதம் வரை அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. தொழில் வரி யாக ரூ.250 கோடி வசூ லிக்க வேண்டும். தொழில் செய்யக் கூடிய நிறு வனங்கள், தொழில் வரி செலுத்த வேண்டும். அதற்கான காலக்கெடுவும் இம்மாதத்துடன் முடிவதால் அதனையும் வசூலிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சொத்துவரி, தொழில்வரி இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நட வடிக்கை எடுக்கப்படும். தொடர் நோட்டீசுக்கு விளக்கம் தராமல் இருந்து வரும் உரிமையாளர்களின் சொத்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்தனர்.

அதிக மகசூல் பெற மண் பரிசோதனை விவசாயிகளுக்கு வேண்டுகோள்

காஞ்சிபுரம்,செப்.3- அதிக மகசூல் பெற விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் வயலில் அறுவடைக்கு பின், உழவுக்கு முன் மண் மாதிரி எடுக்க வேண்டும். வயலின் வரப்பு ஓரங்கள், வாய்க்கால் ஓரம், மரநிழல், ஈரமான பகுதிகள் மற்றும் உரம் குவிந்த பகுதிகளில் ஆகிய இடங்களில் மண் மாதிரி எடுக்க கூடாது. ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 இடங்களில் வி வடிவ குழிகள் அரை அடி முதல் முக்கால் அடிவரை எடுக்க வேண்டும். அந்த குழிகளில் பக்கவாட்டில் உள்ள மண்ணை அரை அங்குலத்திற்கு மேலிருந்து கீழாக சுரண்ட வேண்டும். இவ்வாறு சேகரித்த மண்ணை நிழலில் உலர்த்தி கல், வேர், முதலிய பொருட்களை தவிர்த்து பின் அதை தூளாக்கி பகுதி பிரித்தல் முறையில் அரை கிலோ அளவுக்கு மண்ணை சேகரிக்க வேண்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண்ணை பரிசோதனை செய்வதால் பயிரின் தேவையறிந்து உரமிட்டு உரச்செலவை குறைக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

நம்ம சென்னை செல்பி மேடை மூடல்

சென்னை, செப்.3-  சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் பணிக்காக "நம்ம சென்னை" செல்பி மேடை இரும்பு தடுப்புவேலிகள் அமைத்து மூடப்பட்டது.  சென்னையில் 2-வது கட்ட 4-வது மெட்ரோ வழித்தடம் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம், மற்றும் உயர்மட்ட வழித் தடப்பாதைகள் மூலம் அமைக்கப்பட உள்ளது. மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே மெட்ரோ ரயில்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கலங்கரை விளக்கம் முதல் "நம்ம சென்னை" செல்பி மேடை வரை இரும்பு தடுப்பு வேலிகள்,பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளது சென்னை மாநகரத்தின் முக்கிய அடையாளமாக திகழும் வகையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேடை முழுவதுமாக மெட்ரோ ரயில் பணிக்காக மூடப்பட்டது. பொதுமக்கள் யாரும் அங்கு செல்லாதவாறு இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடியும் வரை  "நம்ம சென்னை" செல்பி மேடை திறக்கப்படாது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காலமானார்

சிதம்பரம், செப். 3- சிதம்பரம் எல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வரும் தீக்கரில் செய்தி யாளராக பணியாற்றிய வருமான முகமது உசேன் மகன் ரபிக் (எ) ஜாபர்சஜிப் (26) சனிக்கிழமை (செப். 3) காலமானார். அவரது உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மூசா, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, நகர் மன்ற துணைத் தலை வர் முத்துக்குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் சனிக்கிழமை மாலை அதே பகுதியில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.
 

;