districts

img

முரசொலி செல்வம் படத்திறப்பு

முரசொலி நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் முரசொலி செல்வம் படத்திறப்பு நிகழ்ச்சி திங்களன்று (அக்.21) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தை திறந்து வைத்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம், பேராசிரியர் மு.நாகநாதன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திரைப்பட கலைஞர்       சத்யராஜ், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்  இதில் கலந்து கொண்டனர்.