புதுச்சேரி,ஜூலை 3-
புதுச்சேரியில் குழந்தை கள் நல மாவட்ட மையத்தின் சேவைகளை மேம்படுத்த முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் செயல்படும் குழந்தைகள் நல மாவட்ட ஆரம்ப இடை யீட்டு மையத்தின் சேவை களை மேம்படுத்தவும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆட்டிசம், பெருமூளை வாதம் மற்றும் பல குறை பாடுகள் உள்ள குழந்தை களுக்கு பலதரப்பட்ட பரா மரிப்பு சேவைகள் இதன் மூலம் வழங்கப்படும்.
புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறையும், சத்யா சிறப்புப் பள்ளி க்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் திங்க ளன்று (ஜூலை 3) கையெழுத்தானது. இதில் சுகாதார செயலர் உதயகுமார், சுகா தாரத்துறையின் இயக்குநர் ஸ்ரீராமுலு, துணை இயக்குநர்கள் ரகுநாதன் சரவணன், சத்தியா சிறப்பு பள்ளியின் இயக்குநர் சித்ரா ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.