திருவண்ணாமலை, டிச.7 - திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஷோபா. அவர் கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். தனது மொபைல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தை மாமியார் வீட்டில் வைத்து விட்டு தன் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அவரது கணக்கில் இருந்து தெரியாத நபர் ‘போன் பே’ வழியாக மொத்தம் ரூ. 2,10,200 திருடியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தர வின்படி, விரைவான நடவடிக்கை எடுத்து சந்தேக நபரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. பின்னர், போன் பே கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி புகார்தாரர் எடுத்த நடவடிக்கையால், முழு தொகையும் மீட்டு உரியவரி டம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.