கடலூர், ஆக.26-
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தால் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று குறித்து சரியாக உணரச் செய்வதற்கு, 15 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாழ்வி யல் திறன்கள் மற்றும் எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்றுக்கான முழுமையான தகவல் களை கூறி தங்களையும், தங்களை சுற்றி யுள்ளோரையும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளும் திறனை வளர்ப்பதற்கு இளை ஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமை தாங்கி மினி மாரத்தான் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் மீரா, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சாரா செலின் பால், காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட மேற்பார்வை யாளர் கதிரவன் வரவேற்றார். மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் திட்ட நோக்க உரை யாற்றினார்.
இதையடுத்து கடலூர் நகர அரங்கில் இருந்து தொடங்கிய போட்டியானது கடற்கரை சாலை வழியாக வெள்ளி கடற்கரையில் முடிவடைந்தது. இந்த மினி மாரத்தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாண வர்களிடையே நாடகம், குறும்பட போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டியும் நடத்தப்பட்டது.