districts

மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி அக்டோபரில் துவக்கம்

சென்னை, ஜூன் 13 -  சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி அக்டோப ரில் தொடங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள் ளது. சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைப் பதற்கு ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில்  திட்டப்பணிகள் நடைபெறு கிறது. முதற்கட்டமாக 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படு கின்றன. 2ஆம் கட்டமாக 3 வழித் தடங்கள் நிர்மானிக்கும் பணி அக்டோபரில் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் இத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.  இதில், உயர்மட்டப் பாதைக் காக, தூண்கள் அமைக்கும் பணி  வேகமாக நடைபெறு கிறது. இந்நிலையில், சுரங்கப் பாதை தோண்டும் பணிக்காக  23 ராட்சத சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் ஆகஸ்ட் மாதம் சீனா, ஜப்பான் நாடுகளிலிருந்து தருவிக்கப்பட உள்ளது.  அக்டோபரில் முழுப்பணி கள் தொடங்க உள்ளதாக வும் தெரிகிறது. கொளத்தூர் சந்திப்பு - வில்லிவாக்கம் வரை 5 கி.மீ. தொலைவுக்கு 4 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களும், கலங்கரை விளக்கம் - மீனாட்சி  கல்லூரி வரை (வழித்தடம் -4) 10 கி.மீ-க்கு 4 இயந்திரங்க ளும் பயன்படுத்தப்பட வுள்ளன. நாதமுனி முதல் ரெட்டேரி வரை 5 கி.மீ. பாதையில் கடினமான பாறைகள் அடையாளம் காணப்பட்ட சவாலான இடங்கள் வழியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளன. நந்தனம் மற்றும் பனகல் பூங்கா இடையேயான 1.3 கி.மீ. பாதையில், பாறை மண் நிலைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு ராட்சத துளையிடும் இயந்திரங்கள் மூலம், தற்போதுள்ள முதல் கட்ட சுரங்கங்களுக்கு கீழே  24 மீட்டர் முதல் 26 மீட்டர்  ஆழத்தில் துளை அமைக்கப் படும். இந்த சுரங்கப்பா தையை தோண்டும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் லிமி டெட் மற்றும் எல் அண்டு  டி நிறுவனங்கள் செய்ய வுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.