districts

சென்னை முக்கிய செய்திகள்

அடுத்தடுத்து 4 இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை

செங்கல்பட்டு, மே 30- செங்கல்பட்டில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றுள்ள நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள அடகு கடையின் பூட்டை உடைத்து 700 கிராம் வெள்ளிப்  பொருட்கள் மர்ம நபர்களால் கொள்ளை அடிக்கப்பட்டது. அதேபோல் செங்கல்பட்டு அடுத்த பாலூரில் உள்ள மருந்துக் கடையின் பூட்டை உடைத்து 3,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாலூரில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.2,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.4,000 மற்றும் ரூ.11,000 மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை  அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர், பாலூர் காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்கள். நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் முகமூடி  அணிந்தபடி பட்டா கத்தியுடன் அடுத்தடுத்து நான்கு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசா ரணையில் தெரிய வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் ஒரு வரை கைது செய்துள்ள காவல்துறையினர் மூன்று இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வரும்  அபூர்வ நிகழ்வு : ஜூன் 3இல் பார்க்கலாம்

சென்னை, மே 30- சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற 8 கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. இதில் பூமி  ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. அதேபோல, ஒவ்வொரு கோளுக்கும் குறிப்பிட்ட நாட்கள் ஆகின்றன. அவ்வாறு சுற்றிவரும் போது, கோள்கள் ஒன்றையொன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் அவ்வப்போது ஏற்படுகின்றன. நமது சூரியப் பாதையில் ஒவ்வொரு கோளும் வெவ்வேறு (பல நூறு கோடி கிலோமீட்டர்) தூரத்திலும், வெவ்வேறு சாய்வு கோணத்திலும் சுற்றி வருவதால் அவை எப்போதும் ஒரே நேர்கோட்டில் அணிவகுப்பதற்கு வாய்ப்பில்லை. மாறாக பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல தெரியும். அது எப்போதாவது நடக்கும். அவ்வாறு ஒரே வரிசையில் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்து வருவது மிக அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 6 கோள்கள் அந்த வகையில் தான், ஜூன் 3 அன்று, கிழக்குத் திசையில் சூரிய உத யத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அடி வானில், வியாழன் (ஜூபிடர்), புதன் (மெர்குரி), யுரேனஸ், செவ்வாய் (மார்ஸ்), நெப்டியூன், சனி என்ற வரிசையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வர உள்ளன. இதனை பூமியில் இருந்து பார்க்கலாம்.  இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால் அதை பார்ப்பது கடினம். எனினும், வானம் தெளிவாக இருந்தால் கடற்கரை பகுதிகளில் இவற்றைக் காணலாம். மீதமுள்ளவற்றை பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்க லாம். இதை காற்று மற்றும் ஒலி மாசுபாடு இல்லாத, அடிவானம் மறைக்காத சற்று உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு பார்ப்பது மிகவும் சிறந்தது. செவ்வாய், சனி வெறும் கண்ணுக்கு மங்கலாக தெரியும். ஜூன் 3 அன்று சனிக் கோளுக்கு கீழேயும், 4-ஆம் தேதி செவ்வாய் கோளுக்கு கீழேயும் பிறைச் சந்திரனையும் காணலாம். இவை கண்ணுக்கு விருந்தாக அமையும். அரிதான ஐந்து கோள்கள்... இதேபோல 5-க்கும் மேற்பட்ட கோள்கள் வரும் ஆகஸ்ட் 28 அன்றும், 2025  ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்ட் 29 ஆகிய தேதிகளிலும் தெரியும் என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் லெனின் தமிழ் கவண் தெரிவித்துள்ளார். அண்மையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் நகர்ந்து சென்ற தை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

செங்கல்பட்டு, மே 30- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கூட்டு  சாலை பகுதியில் திருக்கழுக் குன்றம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு இருசக்கர வாக னத்தை மடக்கினர். காவலர் களை பார்த்ததும் இருசக்கர  வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த காவலர்கள் அந்த இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது தப்பியோட முயன்ற ஆசாமிகளை மடக்கி பிடித்து விசாரித்த தில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிய தால் சந்தேகமடைந்த காவலர்கள் அவர்களை திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் அழைத்து சென்று  விசாரணை நடத்தினர். விசாரணையில் திருக்கழுக்குன்றம் அடுத்த மேட்டு வீரக்குப்பம் பகுதி யைச் சேர்ந்த சேர்மதுரை  (55), திருக்கழுக்குன்றத் தைச் சேர்ந்த சீனிவாசன் (53) என்பதும், இவர்கள்  தொடர்ந்து திருக்கழுக்குன் றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடை களுக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விநியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து, அவர்களிடம்  இருந்த 5 லட்ச ரூபாய்  மதிப்புள்ள குட்கா பொருட் களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை திருக் கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

சாலை விபத்தில் கணவன், மனைவி பலி

செங்கல்பட்டு, மே 30- செங்கல்பட்டு அடுத்த பாலூர் அம்பேத்கர் நகர் பகு தியை சேர்ந்தவர் கங்காரதன்  (58) இவரது மனைவி அமுலு (53). இருவரும் பாலூ ரில் இருந்து செங்கல் பட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண் டிருந்தனர். திம்மாவரம் பகுதியில் சென்று கொண்டி ருக்கும் போது, இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில் பலத்த காய மடைந்த கங்காதரன் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக பலியானார். காயமடைந்த அமுலுவை மீட்டு செங்கல் பட்டு அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனு மதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அமுலு உயிரிழந்தார்.

வாக்குகள் எண்ணும் பணியாளர்களுக்கு திருவண்ணாமலையில் பயிற்சி

திருவண்ணாமலை, மே 30- மக்களவை பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பதி வான தபால் வாக்குகளை எண்ணும் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட அலு வலர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்  பாஸ்கர பாண்டி யன் தலைமையில் பயிற்சி மற்றும் நடை முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மக்களவை பொதுத்தேர்தல் 2024 இல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 11, திருவண்ணாமலை மற்றும் 12, ஆரணி ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எதிர் வரும் ஜூன்.4 அன்று இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களில் எண்ணப்பட உள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்டு அஞ்சல் வாக்குகள் செலுத்தியுள்ள பணி யாளர்களுக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணிக்காக ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 4 மேசைகள் அமைக்கப்படும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு மேசைக்கும் ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு மேற்பார்வையாளர், இரண்டு உதவி யாளர்கள் மற்றும் ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து வகையிலும் சரியாக உள்ள தபால் வாக்குகள் மட்டுமே எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். உரிய படிவங்களில் கையொப்பமிடாத, இரண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்திருத்தல் முதல் வாக்குகள் செல்லாத வாக்குகள் கருதப்படும். தபால் வாக்குகள் எண்ணிக்கை அனு மதிக்கப்பட்ட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடைபெறும். மேற்குறிப்பிட்ட இரண்டு மக்களவை தொகுதிகளில் பதிவான தபால் வாக்கு களை எண்ணும் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால்  பயிற்சி மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

புதுச்சேரி,மே.30- வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என்று புதுச்சேரி கல்வித்துறை அறி வித்துள்ளது. 2023-2024 ஆம் கல்வி யாண்டில் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டு  பள்ளிக ளுக்கு விடுமுறை விடப் பட்டது. இந்நிலையில் ஜூன் மாதம் 6 ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளி கள் திறக்கப்பட இருந்த நிலையில், தற்போது, வெயிலின் தாக்கம் அதி கரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜூன் 12ஆம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் புதுச்சேரி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித் திருக்கிறார். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஒரு வாரம் அதிகரிப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்

கள்ளக்குறிச்சி, மே 30- டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடை பெற உள்ளதை அரசு வேலை நாடு பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அறி வுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் துணை ஆட்சியர்,  துணை காவல் கண்காணிப்பாளர்,  உதவி இயக்குநர் ஊரக வளர்ச்சித் துறை போன்ற 90 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 28.3.2024 அன்று அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இத்தேர்வு 13.7.2024 அன்று நடைபெற உள்ள தால் இப்போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கள்ளக் குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் வார நாட்க ளில் காலை 10 மணி முதல் மதி யம் 1 மணி வரை நடைபெற்று வரு கிறது.  இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படம்,  மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சியில் 18/63 நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ அல்லது 04151-295 422 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு  தங்க ளின் விவரத்தை பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள லாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க பிரிவு தொடக்கம்

கிருஷ்ணகிரி,மே.30-  கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளியில் உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிந்தைய மயக்க சிகிச்சை பிரிவை கல்லூரி முதல்வர் மருத்துவர் மே 30 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடாக தற்போது இந்த வசதி கிடைத்துள்ளது. பெரிய அளவில் அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பதற்காக இந்த பிரி திறக்கப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை முடிந்து அடுத்த 6 மணி நேரம்  ரத்த அழுத்தம், உடல் சீர்நிலை குறித்து அனைத்தும் நவீன கருவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு சீரான பிறகு, வார்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தப் பிரிவு 10 படுக்கைகள் வென்டிலேட்டர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.