சென்னை, செப். 1- திருவொற்றியூர் எல்ஐசி அலுவல கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை கே.பி.சங்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். எல்ஐசி தனது 67ஆவது ஆண்டு தொடக்க விழாவை வெள்ளியன்று (செப். 1) கொண்டாடுகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள எல்ஐசி அலு வலங்களில் ஒரு வாரத்திற்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவெற்றியூர் எல்ஐசி அலுவலகத்தில் முதுநிலை மேலாளர் சம்பத்குமார் தலைமையில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி மேலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தொடங்கி வைத்தார். மேலும் எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொது மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகா மையும் துவக்கி வைத்தார். எல்ஐசியின் சேவைகள் குறித்து மேலாளர் சம்பத் பேசினர். இதில் வளர்ச்சி அதிகாரிகள் ராம லிங்கம், மனோகரன், சங்க நிர்வாகிகள் நாகராஜன், அன்பழகன், பாஸ்கரன், கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.