districts

img

புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தும் போக்கில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர்கள் அணி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர்.