districts

img

மாமனிதன் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமிக்கு பாராட்டு

சென்னை, ஏப். 18-  “மாமனிதன்” தமிழ் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமிக்கு சென்னை யிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத் தில் பாராட்டு விழா திங்களன்று (ஏப். 17) நடைபெற்றது. மாஸ்கோவில் வரும் 20ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடை பெறும் 45ஆவது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் “மாமனிதன்” திரைப்படம் திரையிடப்படுகிறது. அதையொட்டி அந்த திரைப்பட விழாவிற்கு சீனு ராம சாமி கலாச்சார பிரதிநிதியாக அழைக் கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ரஷ்ய கூட்ட மைப்பின்  தூதர் ஒலெக் அவ்தீவ் பேசு கையில், ஆக்ஷன், அட்வென்சர் படங்கள் அதிகம் உள்ள நவீன சினி மாவில் அபூர்வ நிகழ்வாக மாறியுள்ள  சமூக நாடகம் என்ற வகையில் உரு வாகியிருக்கும் படம் “மாமனிதன்”. வாழ்க்கையின் உண்மையான விழு மியங்களைப் பற்றி மக்களை சிந்திக்க வைக்கிறது இந்த படம் என்று கூறி னார். இதில் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, இந்திய, ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில் சங்கத் தின் நிறுவனர், தலைவர் வி.எம்.லட்சுமி நாராயணன், எம்.ஜி.ஆர் பிலிம் இன்ஸ்டிடியூட் தலைவர் ஜெம்ஆர். வீரமணி, கலாச்சார மையத்தின் இயக்குநர் ஜெனடி ரோகலேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  திரைப்படக் குழுவினரை பாராட்டி னர்.