சென்னை, ஆக. 10- பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையில் மட்டுமல்ல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்காக ‘Being Women’ என்ற ஆன்லைன் பத்திரிகையை நடத்தி வந்ததோடு காஸ்டி யூம் டிசைனராகவும் இருந்துவந்தார். தூரிகை யின் திறமை மீது நம்பிக்கை வைத்த இயக்கு நர் வசந்தபாலன் தனது ‘அநீதி’ படத்தில் காஸ்டியூம் டிசைனராக அறிமுகப்படுத் தினார். தான் நடத்தும் ஆன்லைன் இதழில் பெண்க ளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பல்வேறு கட்டுரை களை எழுதியவர் தூரிகை. ‘தற்கொலை செய்துகொள் வது எதற்கும் தீர்வல்ல’ என்று பேசக்கூடிய தூரிகை, தனது வீட்டிலேயே தூக்கிட்டு செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. அவரது உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மற்றும் ஏராளமான எழுத் தாளர்கள், பத்திரிகை யாளர்கள் திரைக்கலை ஞர்கள் அஞ்சலி செலுத்தி னர்.