காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தனித்தொகுதியில் காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய இரண்டு தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய நான்கு தொகுதிகள் உட்பட ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காஞ்சிபுரம் நாடாளுமன்ற 8லட்சத்து 46ஆயிரத்து16 ஆண் வாக்களர்களும், 7லட்சத்து 86ஆயிரத்து 606 பெண் வாக்காளர்களும், 294 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 17ஆயிரத்து 32ஆயிரத்து ,946 வாக்காளர்கள் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் 15ஆயிரத்து 868 வாக்காளர்கள் 18 வயது முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஏராளமான கோயில்களும், சுற்றுலா தளங்களும், ஏரிகளையும் கொண்ட காஞ்சி புரம் மக்களவைத் தொகுதியில்,
1951 தேர்தலில் காமன்வீல் கட்சி சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி தான் அந்த தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராவார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகத குமரவேல் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியாக இருந்த போது காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள் ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை கள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியாக மறு சீரமைப்பு செய்த பின்னர். 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பி னர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3லட்சத்து 97ஆயிரத்து372 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 6லட்சத்து 84ஆயிரத்து4 பெற்றார். இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
நெசவாளர்களின் கோரிக்கை
கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலை உள்ளிட்ட அனைத்து கைத்தறி துணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். தங்கத்தின் விலை உயர்வால் ஜரிகை விலை உயர்ந்து வருவ தால், விலையை கட்டுக்குள் வைக்க கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்த, மருத்துவ காப்பீடுத்தொகை உயர்த்தி மீண்டும் வழங்கப்பட வேண்டும். நெசவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களை பாதிக்கும் உதய் மின் திட்டத்தை கைவிட வேண்டும், நெசவாளர் முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், சென்னையில் இருந்து பூந்தமல்லி, திருபெரும்புதூர் வழியாக காஞ்சிபுரத்திற்கு ரயில் பாதை அமைக்க வேண்டும். செயல்படாத தடுப்பூசி மையம் செங்கல்பட்டு அடுத்த திருமணியில் ஒன்றிய அரசின் சார்பில் சுமார் 110 ஏக்கர் பரப்பள வில் ரூ.800 கோடி செலவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் கட்டி முடிக்கப்பட்டு செயல் படாமல் இருப்பதால் அதை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். செங்கல்பட்டு பரனூரில் காலாவதியான சுங்கச் சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும்.
மீன்வள கல்லூரி தேவை
செய்யூர் பகுதியில் அரசு கல்லூரி ஏதும் இல்லாத நிலையில் மீனவ பல்கலைக் கழகத்தின் சார்பில் ஒரு கல்லூரியை செய்யூரில் அமைத்திட வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மீன்பிடி துறைமுகம் அமைப்ப தற்கான கடந்த காலத்தில் ஒரு வரைவு திட்டம் உருவாக்கப்பட்டது. அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
கிழக்கு கடற்கரை ரயில் திட்டம்
சென்னையில் இருந்து கடலூர் வரை கிழக்கு கடற்கரை சாலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கான நிதியினை ஒதுக்கி திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும். மேல்மருவத்தூர் வரை சென்னை கடற்கரையில் இருந்து இயங்கும் தொடர் வண்டிகளை இயக்க வேண்டும், மேல்மரு வத்தூர், மதுராந்தகம் ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். செய்யூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை கொண்டு வர வேண்டும்.
ஏரிகளை தூர்வார வேண்டும்
ஏரிகளின் மாவட்டமான காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகளை தூர்வாரி சீரமைப்பதுடன் நீர்வரத்து கால்வாய்களையும் செப்பனிட்டுவிவசாயத்தை வளப்படுத்த வேண்டும். அதே போன்று பாலாற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப் பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டம் என்பதால் தற்போது விவசாய நிலங்கள் யாவும் கட்டிடங்களாக மாறும் அபாயம் உள்ளது. விவசாய நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுப்பதுடன் விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை யினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையங்களில் சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும், நிரந்தர தன்மை கொண்ட பணிகளில் ஒப்பந்த ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக உள்ளது. இதே போன்று செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழிற்சாலை களில் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையில் இளைஞர்களின் உழைப்பு சுரண்டல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதை தடுத்திடும் வகையில் தொழிலாளர்களின் சமுக பாதுகாப்பை உறுதி படுத்திட வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
- க.பார்த்திபன்