districts

img

கூகுள் ஏ.ஐ: விரைவில் ஸ்பேம் அழைப்புகளை கண்டறியும் அம்சம் அறிமுகம்!

ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கும் அம்சத்தை விரைவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. கூகுள் நிறுவனத்தின் 2024-ஆம் ஆண்டின் மாநாடு கடந்த மே 14-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பல செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல அறிவிப்புகள் வெளியாகின. ஜிமெயில் தொடங்கி கூகுள் போட்டோஸ் வரை கூகுளின் பல சேவைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனோடு, ஆண்ட்ராய்டு வெர்ஷன் 15 உடன் ஜெமினி நானோ எனும் செயற்கை நுண்ணறிவு திறனை இணைத்து ஆண்ட்ராய்டு போன்களுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை கண்டறிந்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.  தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளில்,  உரையாடல்களை கவனித்து அதில் வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்கள், பாஸ்வேர்ட்கள் உள்ளிட்ட சொற்களை உபயோகப்படுத்தும் பட்சத்தில் கூகுள் தானாகவே பயனருக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் சர்ச்-இல் வெப் ஃபில்டர் அம்சம் அறிமுகம்!

கூகுள் சர்ச் பக்கத்தில் விரைவில் ‘வெப்’ ஃபில்டர் அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது.  இந்த அம்சம் மூலம் பயனர்கள் எவ்வித செயற்கை நுண்ணறிவு  ப்ரீவியூகள் (Preview) இல்லாமல், பயனர்கள் தேடும் கேள்விக்கான எளிய முறையில் இணையதள லிங்குகளை மட்டும் பெற முடியும். தற்போது உள்ள கூகுள் சர்ச்சில் ஷாப்பிங் ரிசல்ட், டிஸ்பிளே நாளேஜ் பேனல் என பல பதில்கள் கிடைக்கின்றது. தேடப்படும் வெப் பக்கங்கள் கீழே சென்றுவிடுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், வெப் ஃபில்டர் அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

வாட்ஸ்அப்பில் சாட்களை பூட்டி வைக்கும் அம்சம்!

வாட்ஸ்அப்பில் சாட்களை பூட்டி வைக்கும் வசதியான ‘Chat Lock’ அம்சத்தை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அந்நிறுவனம் வழங்கி யுள்ளது. Chat Lock வசதி தற்போது, ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.24.11.9 பயனர்களில் சிலருக்கு மட்டும் சோதனை முறையில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், Linked device-களில் இந்த லாக் செய்யப்பட்ட சாட்களை திறந்து பார்க்க முடியாது. உங்கள் போனில்  உள்ள வாட்ஸ்அப்பில் (Primary Device) secret code-யை உருவாக்கி, அதனை வைத்து லாக் செய்யப்பட்ட சாட்கள் Linked device-களில் பார்க்க முடியும்.

 

;