districts

img

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை நியமித்திடுக மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கோரிக்கை

சென்னை, ஜூலை 13-

    சென்னை மாநக ராட்சி பள்ளிகளில் ஆசிரியர் களை நியமிக்க மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன்  துணை ஆணையர் (கல்வி) சரண்யா அரியை சந்தித்து மனு அளித்தார்.

    அந்த மனுவில், சென்னை மாநகராட்சி திரு வொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் உள்ள  எர்ணாவூரில் மாநகராட்சி உயர் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 230  மாணவர்கள் பயில்கின்ற னர். 13 ஆசிரியர்கள் பணி யாற்றி வந்தனர். திரு வள்ளூர் கல்வி மாவட்டத் தில் இருந்து தற்போது சென்னை மாநகராட்சி கல்வி நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது.

   சமீபத்தில் நடைபெற்ற மாற்றலுக்கான நேர்காண லில் 9 ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்று சென்று விட்டனர். தற்போது 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் லேப் உதவியாளர், இளநிலை உதவியாளர், காவலர், தூய்மை பணியாளர் இல்லாத நிலை உள்ளது. தனியார் பள்ளிகளை போல் மாநகராட்சி பள்ளி களை நிர்வாகிக்க வேண்டும்  என தமிழ்நாடு அரசு பல  முயற்சிகளை செய்து  வருகிறது. ஆனால் தேவை யான ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை.

   எனவே உடனடியாக ஆசிரியர்கள், லேப் உதவியாளர், இளநிலை உதவியாளர், காவலர், தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட துணை ஆணை யர் கோரிக்கையை பரிசீலித்து ஒரு வாரத்தில் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார்.