districts

img

ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை செயல்படுத்த வேண்டும்

திருவண்ணாமலை, அக்.13– பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிபிஎம் பெரணமல்லூர் வட்டார மாநாடு ஞாயிறன்று (அக்.13) பெரணமல்லூரில் நடைபெற்றது. கட்சியின் கொடியை கே.பெருமாள் ஏற்றி வைத்தார். கவுன்சிலர் மா.கௌதம் முத்து  வரவேற்றார். இரா.ராஜசேகரன், பி.கே.முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ப.செல்வன்  தொடக்க உரை யாற்றினார். வேலை அறிக்கையை வட்டார செயலாளர் ந.சேகரன் சமர்பித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் நிறைவுரையாற்றினார். ந.பிரபாகரன்  நன்றி கூறினார்.   புதிய வட்டக்குழு 11 பேர் கொண்ட வட்டக் குழுவின் செயலாளராக ந.பிரபாகரன்  தேர்வு செய்யப்பட்டார். தீர்மானம் பெரணமல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை செயல்படுத்த வேண்டும், வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும், பெரண மல்லூர்-சேத்துப்பட்டு  இடையே நகரப் பேருந்து இயக்க வேண்டும்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சட்டவிரோதமாக இயந்திரங்களை வைத்து வேலை செய்வதைக் கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.