கூட்டுறவுத்துறை நூற்பாலைகளை முழுமையாக இயக்க வேண்டும், தினக்கூலித் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலை வாயில் முன்பு தலைவர் கேசவன், செயலாளர் கோபால், பொருளாளர் மாதவன், கவிமணி, தேவி உள்ளிட்ட பலர் ஒருநாள் அடையாள உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.