districts

img

கோட்டகுப்பத்தில் வீடுவீடாக வாலிபர் - மாதர்கள் பிரச்சாரம்

வானூர், பிப்.12- விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டகுப்பம் நகராட்சி 18-வது வார்டில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் சிபிஎம் வேட்பாளராக பர்கர் சுல்தானா போட்டியிடுகிறார். இவருக்கு வாக்குகள் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் சே.அறி வழகன் தலைமையில் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஏ.ஆனந்த், தலைவர் பாஸ்கர், மாணவர் சங்க நிர்வாகி ஜெயபிரகாஷ், வானூர் வட்டச் செயலாளர் பாலமுருகன், அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கீதா, புதுச்சேரி பிரதேச செயலாளர் சத்தியா ஆகியோர் தலைமையில் ஆதரவு கோரினர்.