கிருஷ்ணகிரி,மே.13- தேன்கனிக்கோட்டை அருகே 10 ஆம் வகுப்பு தேர்வில் மலை கிராம மாணவி பிரியதர்ஷினி 494 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அரசஜ்ஜூர் மலை கிராமத்தில் வசித்து இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவரது மகள் பிரியதர்ஷினி, தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பிரியதர்ஷினி அரசு பொதுத்தேர்வில் 500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பாடவாரியாக தமிழ் 98, ஆங்கிலத்தில் 98, கணித பாடத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியல் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவருக்கு பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு மருத்துவ படிப்பு படிக்க விரும்புவதாகவும் பிரியதர்ஷினி தெரிவித்தார்.