districts

img

புதிய பணியிடங்களை உருவாக்க தடையாக இருக்கும் உத்தரவை ரத்து செய்க

குன்றத்தூர், டிச.1 - புதிய பணியிடங்களை உருவாக்குவதில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை ஆணையை ரத்து செய்திட வேண்டும் அரசு ஊழியர் சங்க காஞ்சிபுரம் மாநாடு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட 13ஆவது மாநாடு  நந்தம்பாக்கம் அஞ்சுகம் நகரில் தோழர் தே.லட்சுமணன்  நினைவரங்கில் மாவட்டத் தலைவர் வே.லெனின் தலைமையில் நடைபெற்றது.  எம்.ஆர்.திலகவதி ராமு வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் வி.முத்துசுந்தரம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டைத் துவக்கி வைத்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் தெ.வாசுகி பேசினார். மாவட்டச் செயலாளர் துரை.மருதன் வேலை அறிக்கையையும், பொருளாளர் வே.குமார் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சகோதர சங்கங்களின் தலைவர்கள் எல்.திருமூர்த்தி,  கே.கதிரவன்,  வி.ஏ.சுந்தரவடிவேல், எ.எஸ்.சண்முகம்,  கு.வெங்கட குரு, எம்.தாமோதரன், சிஐடியு மாவட்ட நிர்வாகி டி.லிங்கநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

  இம்மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநில பொருளாளர் மு.பாஸ்கரன் பேசினார். குன்றத்தூர் வட்ட கிளை உறுப்பினர் ஜெ.சண்முகவள்ளி நன்றி கூறினார். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும்  அனைத்து ஊழியர்களுக்கும்  வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 1.1.2016 முதல் ஊதிய மாற்ற 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 60 ஆக உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த ஊழியர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவராக வெ.லெனின், செயலாளராக துரை.மருதன், பொருளாள ராக வே.குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, மகளிர் மாநாடு மகளிர் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் வெ.லெனின் தலைமை தாங்கினார்.

;