districts

சிறுமிக்கு திருமணம் பெற்றோருக்கு எச்சரிக்கை

சென்னை, ஜூன் 27  

     மேடவாக்கம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் புதன்கிழமை (ஜூன் 28) திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.

     இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் பவித்ரா மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் உரிய வயது வரும் வரை சிறுமிக்கு திருமணம்செய்யக் கூடாது என்று அவரது பெற்றோருக்கு அறிவுரை கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.