சென்னை, பிப். 14- பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தாலே இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என பபாசி அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 45ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 16ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் நுழைவு வாயில் அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் வடிவமைக்்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 8 நுழைவு வாயில்களில் ஒரு நுழைவு வாயிலுக்கு கி.ராஜ நாராயணன் பெயரும், மற்றொரு நுழைவு வாயிலுக்கு தோ.பரசிவம் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. புத்தக காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். துவக்க நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்கிறார். புத்தக கண்காட்சியில் மொத்தம் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சி தினசரி காலை 11 மணியில் இருந்து இரவு 8 மணிவரை நடைபெறும்.
முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார். 2ஆவது நாள் வி.ஜி.பி. சந்தோஷம் தலைமையில் மகாத்மா காந்தி, மகாகவி பாரதி யார், வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்கிறார். பள்ளிக்கல் ்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி, மக்கள் நல்வாழ்வுத் துறை, மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய அரசுத்துறை அரங்குகளும் இடம் பெற்றுள்ளன. மும்பை, கேரளா, கர்நாடகா, தில்லியில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழக அரசின் உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம், ஒன்றிய அரசின் சாகித்திய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளி கேஷன் டிவிஷன், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம், மற்றும் தொல்லியல் துறை ஆகிய நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. தமிழக அரசின் சுகாதாரத் துறையின் அறிவுரைப்படி வரும் வாசகர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும்,கிருமி நாசினியைப் பயன்படுத்தியும், தனிமனித இடைவெளியை பின்பற்றும் படியும் அறிவுறுத்தி நடத்துகிறோம். வாசகர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். அறுசுவை அரசு நடராஜனின் சுகாதாரமான உணவு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். வாசகர்களுக்கு குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், ஓய்வறைகளும் ஏற்பாடு செய்துள்ளோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தாலே இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக் கட்டணம் 10 ரூபாய். மொத்தம் 19 நாட்களுக்கு சேர்த்து ஒரே அனுமதிச்சீட்டாக வாங்கினால் 100 ரூபாய் மட்டுமே. இதுவரை ஆன்லைன் மூலம் 40 ஆயிரம் டிக்கெட்டுக்கள் விற்பனையாகியுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.