districts

img

கெலவரப்பள்ளி அணையில் பொங்கி வரும் நுரை

கிருஷ்ணகிரி, மே 19- ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை யில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் மாசடைந்த நுரை பொங்கி ஞாயிறன்ற (மே 19) வெளியேறி வருகிறது. கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம், நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு அம்மாநிலத்தில் 114 கிமீ தூரமும்,தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம், வழியாக 320 கிமீ தூரம் பயணித்து சிதம்பரம் கடந்து வங்க கடலில் கலக்கிறது. இந்நிலையில் பெங்களூர் பெருநகர கழிவுகள் அங்குள்ள ஒரத்தூர் ஏரிகள் நிறைந்த ஓசூர் வரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.  பெங்களூரு நகருக்குள் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமாக உள்ள தொழிற்சாலைகளின் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயன கழிவுகள் ஆற்றுக்குள் நேரடியாக விடப்படுகிறது. இதனால் நீர் மாசு,சுவாசிக்க முடியாத அளவு துர்நாற்றம் அடைந்து கருப்பு நிறத்தில் கெலவரப்பள்ளி அணைக்கு வெண்நுரை மிதந்து வருகிறது.  அணையிலிருந்து 5 நாட்களாக தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி வரை நீர் திறக்கப்பட்ட நிலையில், ஞாயிறன்று 240 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது.  இருப்பினும் நீரில் 3 அடி உயரத்திற்கு நுரை பொங்கி பஞ்சுப் பொதிகளை போல நகர்ந்து வருகிறது. நீரின் கடும் மாசு குறித்து பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கர்நாடகா, தமிழகம் இரு மாநில மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பல ஆண்டுகளாகவும்,சில நாட்கள் முன்பு மாசு குறித்து பரிசோதிக்க நீர் மாதிரிகளை எடுத்துச் சென்றனர். சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சியினர் தொடர்ந்து கேட்ட போதும் இதுவரை மாசு குறித்து பரிசோதனை முடிவுகள் தெரி விக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் பயிர்கள், காய்கறிகள் விளைச்சல் கடுமையாக குறைந்து வருவதாகவும்,பல புதிய புதிய வியாதிகள் விவசாய பயிர்களுக்கு வருவதாகவும்,இவற்றைத் தடுத்திட விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து வருகின்றனர். விளைச்சல் கடும் பாதிப்பு,பயிர்களுக்கு ஏற்படும் புதிய வியாதிகளை தடுக்க மருந்து அடிப்பதற்கும் அதிகமான செலவினங்கள் ஆவதாலும் தமிழக அரசு,பொதுப்பணித் துறையும் இதுகுறித்து தலையிட்டு தென்பெண்ணை ஆற்று நீரில் ஏற்படும் கடும் மாசு நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

;