பறக்கும் ரயில் சேவை 7 மாதங்கள் ரத்து
சென்னை,மே 31- சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வருகிற ஜூலை 1 முதல் அடுத்தாண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் அங்கு எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே அங்கு கூட்டத்தை குறைக்க தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வடமாநிலங்களுக்கு ரயில்களை இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது. எனவே சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கீ.மீ தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க ரயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. இதற்கு ரயில்வே வாரியம் ஒப்பு தல் அளித்தது. ஆனால் நிலம் கையகப்படுத் துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பணி கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட் டுள்ளது. அதேவேளையில் சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சீருடையில் பயணிக்கும் மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது என உத்தரவு
சென்னை,மே 31- பள்ளி சீருடையில் வரும் மாணவர்க ளிடம் பேருந்து நடத்துனர்கள் பயண அடையாள அட்டை கேட்கக்கூடாது என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினே ஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரை யிலும் சென்று வர அனுமதிக்க வேண்டும். அதே போன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்) அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில் பயற்சி நிலைய மாணவர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் 2022-2023-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்து கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவினை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துறை எச்சரித்துள்ளது.
சென்னையில் ஜூன் 3 மலர் கண்காட்சி
பெங்களூரு, ஊட்டி, ஓசூலிருந்து மலர்கள்
சென்னை,மே 31- மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணா நிதியின் பிறந்த நாளை யொட்டி ஜூன் 3-ந்தேதி சென்னை செம்மொழி பூங்காவில் ்மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூன் 3-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200- க்கும் அதிக வகை யிலான மலர்களால் கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சென்னையில் 2ஆவது முறையாக நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள், கலாச் சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கக்கூடிய வகையில் மலர் அலங்காரங்கள் வைப்படுகிறது.
குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
ஒரகடம்,மே 31- காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த இதே ஒரகடம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் ஓரகடம் திருபெரும்புதூர் செல்லும் சாலை வண்டலூர் வாலாஜாபாத் செல்லும் சாலை பகுதிகளில் குப்பை கழிவுகளை கொட்டி எரிப்பதால் கரும் புகை வெளியேறி வருகிறது. இதனால் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்களும் பாதிப்படைகின்றனர். இதனால் மாசு கலந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே குப்பைக் கழிவுகளை கொட்டி எரிப்பதை தடுக்க ஒரகடம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் இந்திய நிறுவனத்திற்கு 2வது இடம்
சென்னை, மே 31- இந்தியாவின் ஸ்மார்ட் வாட்ச் பிராண்டான பயர்–போல்ட் நிறுவனம் உலகளவில் ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் 2வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய கவுண்டர் பாயின்ட் அறிக்கையில், உலக அளவில் 2023–ம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 9 விழுக்காடு சந்தைப் பங்கை இந்நிறுவனம் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த துறையின் ஜாம்பவான்களான சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்களைத் தாண்டி இந்நிறுவனம் இந்த சாதனையை படைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020–ம் ஆண்டு ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியை துவங்கிய இந்நிறுவனம் இந்த சந்தையில் குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ளது. இந்த பிராண்ட் இந்தியாவின் நம்பர் 1 பிராண்டாக ஐடிசி–ஆல் அறிவிக்கப்பட்டது. அதை தற்போது கவுண்டர்பாயின்ட் ஆய்வு அறிக்கை மேலும் உறுதிப்படுத்தி உள்ளது என்று பயர்–போல்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் அர்னவ் கிஷோர், ஆயுஷி கிஷோர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் லாரி ஸ்டிரைக் வாபஸ்
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தண்ணீர் நிரப்பும் நிலையங்கள் தொடர்பான பிரச்சினையால் நாளை தண்ணீர் லாரிகள் இயங்காது என தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். கோரிக்கைகள் ஏற்கப்பட்ட தால் தண்ணீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அதன் உரி மையாளர்கள் அறி வித்துள்ளனர். மேலும், செயல்படாமல் இருந்த தண்ணீர் நிரப்பும் நிலை யத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்த தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மினி லாரி மோதி 5 ஆட்டோக்கள் சேதம்
அச்சரப்பாக்கம்,மே 31- செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை அருகே சென்னையில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற மினி லாரி நிலை தடுமாறி ஆட்டோ நிறுத்தத்தில் புகுந்தது. இதில் அங்கு வரி சையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆட்டோக்கள் மீது மோதியது. 5 ஆட்டோக் கள் பள்ளத்தில் சாய்ந்து நொறுங்கியது.'
மடப்பட்டு ஊராட்சிமன்ற தலைவர், துணைத் தலைவர் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து
கள்ளக்குறிச்சி, மே 31- மடப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் கையொப்பமிடும் அதி காரம் ரத்து செய்யப்பட்டதுடன் ஊராட்சி செயலாளர் பணிநீக்கம் செயப் பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மடப்பட்டு கிராம ஊராட்சியில், மாவட்ட ஆட்சியர் உத்தர வின்படி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சியின் கூட்ட அறிவிப்பு பதிவேடு, தீர்மான பதிவேடு, ஊராட்சி பதிவேடுகள் 1 முதல் 31 பதிவேடுகள் முறையாக பரா மரிக்காதது மற்றும் ஊராட்சியின் தீர்மானம் செலவின சீட்டுகள் இல்லாமல் செலவினம் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது. இதுகுறித்து 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 (1) (அ) மற்றும் பிரிவு 206(1) (அ) இன் கீழ் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆகியோரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஊராட்சிகள் சட்டம் 1994ஆம் ஆண்டு பிரிவு 203இன்படி, மடப்பட்டு ஊராட்சி மன்றத் தலை வர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலை வர் ஆகியோர் கையொப்பமிடும் அதி காரத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி பணிகளையும், கணக்குகளையும் சரிவர செய்யாத காரணத்தினால் ஊராட்சி செயலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்பணிகளை கவனிக்கத் தவறிய சம்மந்தப் பட்ட அலுவலர்கள் மீது துறைரீதியான நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும், இதுபோன்று ஊராட்சிகளில் முறை கேடுகளில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரி வித்துள்ளார்.
மனுநீதி நாள் முகாம்
கடலூர் , மே 31- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் மனுநீதினால் முகம் நடைபெற்றது. ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 1,027 பயனாளி களுக்கு 5 கோடி 12 லட்சம் மதிப்பிலான பய னாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொது மக்களிடம் இருந்து மனுக் கள் பெற்றார். இந்த நிகழ் வில் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ, உதவி ஆட்சியர் (சிதம்பரம்) சுவேதா சுமன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
வணிகவரி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை
விழுப்புரம், மே 31- வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கொங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் வியாபாரி பாண்டியன் (40). இவருடைய கடைக்கு டின் நம்பர் மற்றும் ஜி.எஸ்.டி. எண் வாங்குவதற்கு கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய திருக்கோவிலூர் வணிகவரித்துறை அதிகாரி தவமணி (45) என்பவரை அணுகினார். அப்போது அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பாண்டியன் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் தவமணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் செவ்வாயன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) புஷ்பராணி, லஞ்சம் வாங்கிய தவமணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
மின்னல் தாக்கி பெண் பலி
சேத்துப்பட்டு, மே 31- திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள செய்யானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி வளர்மதி (44). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். வளர்மதி செவ்வாய்க்கிழமை மாலை செய்யானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பயிர் நடவு செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வளர்மதி, மீது மின்னல் தாக்கியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தச்சம்பாடி, கிராம நிர்வாக அலுவலர் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறையினர் வளர்மதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் பணம் தருவதாக ரூ.46 லட்சம் மோசடி
வேலூர், மே 31- வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் புதனன்று (மே 31) நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர். காட்பாடி காங்கேயநல்லூரைச் சேர்ந்த விஜய் என்பவர் அளித்த மனுவில், காட்பாடி திருநகர் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதில் ரூ.1 லட்சம் செலுத்தினால் கூடுதலாக 20 ஆயிரம், 10 மாதங்கள் வழங்குவதாக தெரி வித்தனர். இதனை நம்பி நான் மற்றும் எனது நண்பர்கள் சேர்ந்து ரூ.46 லட்சம் முதலீடு செய்தோம். மேலும் தீபாவளி சேமிப்பு திட்டத்தில் ரூ. 43 ஆயிரத்து 500 செலுத்தினோம். ஆனால் நிதி நிறு வனத்தில் கூறியபடி பணம் எதுவும் வழங்கவில்லை. இது பற்றி கேட்பதற்காக நேரில் சென்ற போது அந்த நிறுவனம் மூடப் பட்டுள்ளது. கடந்த 2 வாரமாக அதன் உரிமை யாளரையும் காணவில்லை. எனவே நிதி நிறுவன உரிமையாளரை கண்டுபிடித்து எங்களுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவர் கூறியுள்ளார். கே.வி குப்பம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசி என்பவர் அளித்த மனு வில், வரதட்சணை கேட்டு வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுக்கும் கணவர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
வங்கி அதிகாரிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
கள்ளக்குறிச்சி, மே 31- வங்கி அதிகாரிகள் தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் வேண்டுகோள்விடுத்தார். கள்ளக்குறிச்சியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், டிட்கோ அறக்கட்டளை தலைவர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் பேசுகையில், இந்த திட்டம் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழிலாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும், புதிய தொழில் முனைவோராக உருவாக்குவதற்காகவும் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 விழுக்காட்டினர் வசிக்கின்றனர். குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் 90 விழுக்காடு வசிக்கின்றனர். படித்த இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்குவதற்கு மிகச்சிறந்த திட்டமாகும். அனைத்து வங்கி அலுவலர்களும் புதிதாக தொழில் தொடங்க இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டியாகவும், தொழிலில் உள்ள நுணுக்கங்கள் குறித்து தெளிவுபடுத்தி, அவர்களுக்கு தேவையான அறிவுறைகளை வழங்கி, தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதனைதொடர்ந்து மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் அரசு திட்டங்களில் சிறப்பாக கடன் வழங்கிய வங்கி மேலாளர்களுக்கு பாராட்டு கேடயங்களை ஆட்சியர் வழங்கினார்.